பிஷப் ஹீபர் கல்லூரியில் மாதிரி கிராமம் மற்றும் பள்ளி தொடக்கம்

பிஷப் ஹீபர் கல்லூரியில் மாதிரி கிராமம் மற்றும் பள்ளி தொடக்கம்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாதிரி கிராமம் வயலூர் மாதிரி பள்ளிகள் தொடக்க தொடக்க விழா கல்லூரியின் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் D.பால் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட திருச்சி - தஞ்சை மண்டல பேராயர்  சந்திரசேகரன் விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து திருச்சி மணிகண்டம் மண்டல கல்வி அலுவலர் மருதநாயகம்  கூறியதாவது, பிஷப் ஹீபர் கல்லூரி முன்வந்து மாதிரி கிராமம் வயலூர் மாதிரி பள்ளி  ஏற்றுக்கொண்து ஒரு நல்ல  விஷயமாகும். அதுமட்டுமின்றி உறையூர்  சிஎஸ்கே பள்ளிக்கும், வயலூர் அரசுப் பள்ளிக்கும், சூரிய ஒளி மின்சாரம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மெய்நிகர் வகுப்பறை, முதலுதவி பெட்டி ஆகியவற்றையும் வழங்கியுள்ளனர்.

NAAC அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் இதுபோன்று ஒரு கிராமங்களையோ அல்லது பள்ளிகளையோ மேம்படுத்தும் விதமாக அவற்றை தத்தெடுத்தல் NAAC விதிமுறைகளில் ஒன்றாகும். 

அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளை மேம்படுத்துவதற்காக இதுபோன்று கல்வி நிறுவனங்கள் முன்வந்து தங்களுடைய பங்களிப்பை செய்வதன் மூலம் நாட்டில் பல்வேறு கிராமப்புற பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடர்வதற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu