சட்டவிரோத செயல் கடும் நடவடிக்கை. போலீஸ் எஸ்பி மயில்வாகனன் எச்சரிக்கை.

சட்டவிரோத செயல் கடும் நடவடிக்கை. போலீஸ் எஸ்பி மயில்வாகனன் எச்சரிக்கை.

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது 
சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் 
கண்காணிப்பாளர் அ.மயில்வாகணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதன் நடவடிக்கையாக அதிரடியாக மாவட்டம் முழுவதும் ரெய்டு செய்யப்பட்டு இன்று (10.04.2021) மட்டும் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 15 நபர்கள் 
மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் 
அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த வாரம் சட்டவிரோத கள்ள மது விற்பனையில் ஈடுபட்ட 45 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, கள்ள மதுவிற்பனை, மணல் திருட்டு, சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr