மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு எம்.பி கடிதம்

மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இராணுவ இடத்தை கொடுக்குமாறு எம்.பி கடிதம்

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பில், கருமண்டபம், மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் செல்லும் பகுதி விராலிமலை, கல்லுக்குழி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமான பணி 7 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த பாலத்தில் மன்னார்புரம் செல்லும் பகுதி நீங்கலாக மற்ற பகுதிகளில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் மன்னார்புரம் செல்லும் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடம் நிலம் கிடைக்காததால் பணியை நிறைவு செய்து விடலாம் என்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிந்துரைகள் சென்றன. ஆனால் வருடங்கள் உருண்டோடின தவிர ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் ஏதோ ஒரு காரணம் கூறியதைத் தவிர நிலம் தரும் பிரச்சனையில் அசைந்து கொடுக்கவில்லை.

அதிக காலதாமதம் ஆன நிலையில் அந்தப் பகுதியிலேயே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை மைதானத்தில் 77 சென்ட் (3116 6.19 சதுர மீட்டர்) நிலத்தை மாநில அரசிடமிருந்து பெற்று பாதுகாப்புத் துறையிடம் மாற்றமாக வழங்கி இடத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பணியை துவங்க வசதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 2.5 கோடி டெண்டர் முடிவடைந்துள்ளது. நிலம் கைக்கு வந்தால் நெடுஞ்சாலைத்துறை பணி தொடங்க ஆணை வழங்க தயாராக உள்ளது.

ஆனால் தேதி சிறப்பு காவல் படை நிலத்தை மாற்று நிலமாக வழங்கி எதிர்புறம் உள்ள ராணுவ நிலத்தை பெறுவது தொடர்பாக அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் பணி நிறைவடையாமல் உள்ள மேம்பாலத்திற்கான இடத்தை தமிழ்நாடு காவல்துறை தந்துள்ள மாற்று இடத்தை ஏற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 0.6 ஏக்கர் நிலத்தை மாற்றி தருவது சம்பந்தமாக விரைவில் உத்தரவிடக்கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவருடைய இல்லத்தில் சந்தித்து அதற்கான வேண்டுகோள் கடிதத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் இந்த மேம்பாலம் விரைவில் பணி தொடங்கி முழுமையடைந்தால் திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசல் குறைய தீர்வாக இருக்கும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr