வாக்காளர் அட்டையை காட்டினால் 16 சதவீதம் சலுகை வழங்கிய சமர் கார் ஸ்பா - 100% வாக்கு பதிவுக்கான புதிய விழிப்புணர்வு முயற்சி 

வாக்காளர் அட்டையை காட்டினால் 16 சதவீதம் சலுகை வழங்கிய சமர் கார் ஸ்பா - 100% வாக்கு பதிவுக்கான புதிய விழிப்புணர்வு முயற்சி 

தமிழக சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள்  விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தன்னுடைய கடையில் இருந்து கொண்டே மக்களிடையே நூறு சதவீதம் வாக்குபதிவு  செய்வதற்கான வழி என்ன என்று யோசித்து ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறார் ஒரு தனியார் கார் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் முத்து.

திருச்சி கே.கே.நகரில் உள்ள சமர் கார் ஸ்பா ( Samar car Spa ). இங்கு வருபவர்கள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டையை காட்டினால் 16 சதவீதம் சலுகை அளிப்பதாக கடையின் உரிமையாளர் ஒரு பேனர் வைத்துள்ளார். அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் தினந்தோறும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டையை காட்டி சலுகையை பெற்று செல்கின்றனர். 

இது குறித்து கடை உரிமையாளர் முத்து கூறுகையில்... அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குபதிவு வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக நான் இதை செய்துள்ளேன் .
அனைத்து கட்சிகளின் கொடிகளும் கட்டப்பட்டுள்ளதால் மக்களிடையே இன்னும் வேகமாக சென்றடைந்துள்ளது. 

நேற்றைய தினம் முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை சலுகை உண்டு. பதினாறாவது சட்டமன்ற தேர்தல் என்பதால் 16 நாட்களுக்கு சலுகை அளிக்கலாம் என்று ஒரு முயற்சியில்  இதை தொடங்கி இருக்கிறேன். பெரும் புரட்சிகளை செய்து மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு வகை எனில் நம்மால் முடிந்ததை செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் சமுகத்தின் மீதான அக்கறையே தானே என்கிறார் முத்து. புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU