திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் சாக்கடை - துர்நாற்றத்தால் பொதுமக்கள் ஓட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் சாக்கடை - துர்நாற்றத்தால் பொதுமக்கள் ஓட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள சாலை வழியாக தான் மத்திய பேருந்து நிலையத்திற்கு அதிகமான அளவில் பேருந்துகள் வந்து செல்லக்கூடிய சாலையாக உள்ளது.

அந்த சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் அதில் உள்ள சிமெண்ட் சிலாப் கற்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் உணவு கடைகள், டீ கடைகள் மற்றும் இதர பொருட்கள் வாங்கக் கூடிய கடைகளும் அதிக அளவில் உள்ளது. துர்நாற்றத்தில் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு அப்பகுதியை கடக்க நிலையுள்ளது. மேலும் கான்கிரிட் பலகை திறந்து வைத்திருப்பதால் இரவு நேரத்தில் சிறுவர்கள் முதியவர்கள் உள்ளே விழுவதற்க்கு  வாய்ப்புகள் அதிகம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ளவர்கள் பலமுறை மாநகராட்சியிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதியில் உள்ளவர்கள் முன் வைக்கின்றனர். உடனடியாக மாநகராட்சி இந்த சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். அந்த கான்கிரிட் பலகைகளை மூட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn