பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் தேதியை அறிவித்த அமைச்சர் கே.என் நேரு

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும்  தேதியை அறிவித்த அமைச்சர் கே.என் நேரு

திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பின்னர் பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு...எடமலைப்பட்டி புதூர், அரியமங்கலம், லால்குடி மூன்று இடங்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. 5 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

33 வகையான நோய்களுக்கு மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 380 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று மார்க்கெட் வருவதற்கான பணியும் திட்ட அறிக்கையும் தயார் செய்து வருகிறோம்.

மேலும் மொத்தம் மற்றும் சில்லறை மார்க்கெட் வரவுள்ளது. குடமுருட்டியிலிருந்து கோரையாற்று வரை சிமெண்ட் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிதிக்காக காத்திருக்கிறது.

பஞ்சப்பூர் 10 ஏக்கரில் ஐடி பார்க்க வரவுள்ளது. பஞ்சபூரில் நெடுஞ்சாலை துறை சார்பாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சென்னை கத்தி பாரா மேம்பாலம் போல் அமைக்க உள்ளோம். பஞ்சப்பூர் கழிவுநீரை 300 கோடி செலவில் 100 mld சாக்கடை நீரை சுத்திகரித்து மீண்டும் வாய்க்காலில் விடப்படும். திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வு செய்து இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 1500 கோடி செலவு சாலைகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி நிதியில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு...350 கோடியும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.மாநகராட்சி நிதி பயன்படுத்தவில்லை. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் முதலில் திறக்கப்படும். நவம்பர் மாதம் திறப்பதாக இருந்தது. ஆனால் பணிகள் முடிவடையாத நிலையில் ஜனவரி மாதம் கண்டிப்பாக  திறக்கப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn