தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி

தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணியை மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் .

 விழிப்புணர்வு பேரணியானது மணப்பாறை காமராஜர் சிலையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மணப்பாறை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது,

 பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன,

 இந்த நிகழ்ச்சிகள் மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேசன், ஜே சி ஐ அமைப்பினர் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், உள்பட பலர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn