மக்களிடம் அதிகரிக்கும் மன அழுத்தத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்
மன அழுத்தம் மனச்சோர்வு என்பது இன்றைக்கு எல்லோரும் எளிமையாக பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது. ஆனால் இந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் உளவியல் பிரச்சினைகள் குறித்து புரிதல் என்பது மிகவும் குறைவே. இந்த கொரோனா காலத்தில் அனைவரும் வீடுகளில் இருக்கும் பொழுது இன்றைக்கு இருக்கும் காலை சூழலும், பொருளாதார நிலையும் நமக்கு மேலும் மேலும் மன அழுத்தத்ததையும், மன சோர்வையும் உண்டாக்குகின்றன.
இவற்றை எப்படி கையாளுவது இந்த தொற்று காலத்திலும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி திருச்சி ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர். ராமகிருஷ்ணன் கூறும் வழிமுறைகள் பின்வருமாறு
மனம், உடல் இவை இரண்டும் ஒன்றாக இணைந்து செயல்படும் போது தான் நம் நாள் முழுமை அடையும் மக்கள் இன்றைக்கு இருக்கும் கால சூழலை நினைத்துப் பயந்து தங்களை நோயாளிகளாக மாற்றி விடுகின்றனர். பேரிடர் காலங்களில் பயம் இருப்பது சாதாரணமான ஒன்று அது அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. இன்றைய சூழலில் நோய் தொற்று ஏற்படுமோ என்று பயப்படுபவர்களை விட நோய்த்தொற்று ஏற்பட்டு நமக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவை கிடைக்காமல் போய்விட்டால் என்ன என்பது பற்றிய பயம் தான் அதிகரிக்கிறது இந்த பயமே அவர்களை முடக்கி விடுகிறது.
முதலில் பயம் என்பதை சரியான முறையில் கையாள்வது மிக மிக அவசியம். நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுபவர்கள் தங்களை சுகாதாரமாகவும், ஆரோக்கியமான முறையிலும் வைத்துக் கொள்வது மிக அவசியம். எல்லோருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தூக்கம் வீடுகளில் தானே இருக்கிறோம், வேலையும் வீட்டில் இருந்து தானே என்று நமக்கான கால அட்டவணையை பின்பற்றாமல் நம்முடைய நேரத்திற்கு ஏற்றவாறு உணவு உண்பவர்கள் பல பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது நம் தூக்கத்தை பாதிக்கின்றது.
அதேபோன்று, தூங்குவதற்கு முன்பு சண்டையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு இது மூளையின் செயல்பாட்டை மாற்றி தூக்கத்தைக் கெடுக்கும். இன்னும் நம் மனதையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு விளையாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதைவிட புத்தகம் வாசித்தலை நாம் பழக்கபடுத்திக் கொள்ளலாம். இன்றைய சூழலில் வெளியில் சென்று புத்தகங்கள் வாங்கி படிக்க இயலாவிடினும் இ- புத்தகங்கள் கிடைக்கும் அவற்றை பதிவிறக்கம் செய்து படித்து கொள்ளலாம்.
இன்றைக்கு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் வீடியோ கேம் குறிப்பாக Pubg, free fire போன்ற வன்முறையை காண்பிக்கும் விளையாட்டுகளை
விளையாடுகிறார்கள். இது என்ன செய்கிறது என்றால் அவர்களுடைய கோபத்தையும், மூர்க்கதனத்தையும் அதிகப்படுத்துகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் விளையாடு வதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் செயல்படுவதற்கு செஸ், கேரம் போன்றவற்றில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். அல்லது குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்துக்காட்டச்சொல்லி
நாமும் குழந்தை தனத்தோடு இருப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
முடிந்த வரை எல்லா நேரங்களிலும் நம்மை ஏதேனும் ஒரு வேளையில் ஈடுபடுத்திக் கொள்வது அதிலும் நமக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்துவது மனதை மகிழ்ச்சியாக வைக்க உதவும். பாட்டு பாடுதல், நடனமாடுதல் போன்ற ஏதேனும் ஒற்றை நாம் செய்து கொண்டிருக்கும் பொழுது மனம் புத்துணர்ச்சி அடையும். இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சூழல் என்பது கடந்து விடலாம் என்ற ஒற்றை நம்பிக்கை மட்டுமே நம்மை எல்லாவற்றிலும் இருந்து விடுதலை செய்யும். தொற்று ஏற்பட்டாலும் சரியாகும் என்று நம்புபவர்கள் மிக விரைவில் குணமடைந்து வீடு செல்கிறார்கள். 10 சதவீதம் மக்கள் மட்டுமே அக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது
நாம் அனைவரும் அடுத்த 90 சதவீதத்திற்குள் இருக்கிறோம் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று எப்பொழுது நம்புகிறோமோ அப்போதே நமக்கு மனதில் எவ்வித குழப்பமும் ஏற்படாது மனமும் தைரியமாக இருக்கும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்த இதுபோன்று காலகட்டங்களை நாம் எளிதில் வென்று விடலாம் உலகப் போர் சுனாமி போன்ற பேரிடர்களை கடந்து வந்திருக்கிறோம். வீடுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இந்த தொற்றையும் நாம் எளிதில் வென்று விடலாம் என்ற மனநிலையை மக்கள் உணரும் பொழுது மனஅழுத்தம் என்பதெல்லாம் மறந்து மகிழ்ச்சி மட்டுமே மனதில் நிலை கொள்ளும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK