திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா!!

திருச்சி சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா!!

திருச்சி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள Tmsss வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நிறுவனம் என்ற விருது பெற்ற TMSSS இயக்குனர் Fr.ஜான் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் விழா நடைபெற்றது.

Advertisement

சொந்தம் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தை சேர்ந்த மணப்பெண் S.சத்யா மணமகன் E.அலோசியஸ் ஆகியோரின் திருமண விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. 

Advertisement

இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு மாவட்ட நீதிபதி ஜெயாசிங், செயலாளர் (இலவச சட்ட பணி ஆனைக்குழு )திருச்சி மாவட்டம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மணமக்களை வாழ்த்தினார்.

சிறப்பு அழைப்பார்களாக A. தமீமுன் நீஷா சமூக நலத்துறை அதிகாரி திருச்சி மாவட்டம் சுந்தரமூர்த்தி, சட்டம் ஓழுக்கு உதவி ஆணையர் ஶ்ரீரங்கம் திருச்சி மாவட்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான மார்ட்டின் நிகழச்சிக்கு தலைமை தாங்கினார்.

Advertisement

ஜான் செல்வராஜ் இயக்குனர் &செயலர் TMSSS திருச்சி அருட்தந்தை ஜெயராஜ் பொருளாளர் TMSSS திருச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழச்சிக்கு வருகை புரிந்தவர்களை மேரிசுஜா (கண்காணிப்பாளர் சொந்தம்) TMSSS வரவேற்றார்.