இரவு நேரங்களில் சுற்றி திரியும் திருநங்கைகளுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

இரவு நேரங்களில் சுற்றி திரியும் திருநங்கைகளுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் மத்திய பேருந்து நிலையம் மற்றும் சாலை ஒரங்களில் உள்ள திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்து நிலையங்கள், ரயில்வே சந்திப்பு, பிரதான சாலைகளின் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் ஒரங்களில் திருநங்கைகளால் பொதுமக்களுக்கு பாலியல் தொல்லைகள், பணம், செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் வழிப்பறி மற்றும் வேறு சில இன்னல்களை சந்திப்பதாகவும்,

மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணிக்கும் வெளியூர் வாசிகளின் உடமைகளை களவாடுவது என பொதுமக்களிடமிருந்து அதிகளவில் வாய்வழி புகார்கள் பெறப்பட்ட நிலையில், திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், கடந்த (30.01.2024)ந் தேதி முதல் தொடர்ந்து பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிதனி குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு இரவு ரோந்து மேற்கொள்ளப்பட்டு, திருநங்கைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (03.03.2024)-ந் தேதி இரவு 2 பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 12 காவல் ஆளிநர்களுடன் 2 குழுக்களாக பிரிந்து, திருநங்கைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியாக திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், விராலிமலை சந்திப்பு, மதுரை பைபாஸ் சாலை, மன்னார்புரம், சத்திரம் பேருந்து நிலையம், சஞ்சீவிநகர் சந்திப்பு மற்றும் அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் சிறப்பு ரோந்து செய்யப்பட்டது.

மேற்கண்ட சிறப்பு ரோந்தின்போது இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சுமார் 35 திருநங்ககளை பிடித்து, தக்க அறிவுரைகள் வழங்கி எச்சரித்தும், மேலும் எச்சரிக்கையை மீறி சாலைகளில் மீண்டும் சுற்றி திரியும் திருநங்கைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன் கருதி திருநங்கைகள் இரவு நேரத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு இரவு நேர ரோந்துதொடர்ந்து நடத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision