பயணிகள் அலறல் 2 தனியார் பேருந்துகளை சுற்றி வளைத்து பிடித்த கண்டோன்மெண்ட் போலீசார்

பயணிகள் அலறல் 2 தனியார் பேருந்துகளை சுற்றி வளைத்து பிடித்த கண்டோன்மெண்ட் போலீசார்

திருச்சி மாநகரில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் தனியார் பேருந்துகள் போட்டி கொண்டு செல்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குளாகும் நிலை ஏற்படுகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஸ்ரீரங்கம் செல்லக்கூடிய தனியார் பேருந்து ஒன்றும், சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டது. இதில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் இரண்டு தனியார் பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வேகமாக வளைவுகளில் திரும்பியபோது இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதுவது போல் சென்றது.

இதனால் இருசக்கர வாகனம் ஓட்டி தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதை கண்டதும் உடனடியாக அந்த இரண்டு தனியார் பேருந்துகளையும் சுற்றிவளைத்து நிறுத்தினர். பின்னர் இரண்டு பேருந்துகளையும் ஓரமாக நிறுத்தி ஓட்டுநர்களை கடுமையாக எச்சரித்தனர். பின்னர் அந்த இரண்டு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்புக்கு தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

ஆனால் வசூலுக்காக போட்டிபோட்டுக்கொண்டு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கும், சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் உயிரைப் பறிக்கும் பேருந்துகள் ஆக மாறி வருவது பேருந்து பயணிகளிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO