பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேதியை மாநில அரசு தான் முடிவு செய்து அறிவிக்கும் திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேதியை மாநில அரசு தான் முடிவு செய்து அறிவிக்கும் திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மூன்று நாட்களுக்கு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலாக அதிகரித்த வண்ணம் உள்ளது. 400க்கும் அதிமான பாதிப்பு இருந்த இடங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 1500 வரை அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடத்தப்படும். மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் உடல் நலம் முக்கியம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை அனுமதிக்கும் காலக்கட்டத்தில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அனைவருமே தெரிவித்தனர்.தேர்வு தேதி மட்டும் முடிவு செய்யப்படவில்லை. மற்ற மாநிலங்கள் தரப்பில் சிபிஎஸ்இ பள்ளி பாடத்திட்டத்தை மனதில் வைத்து கருத்துக்களை தெரிவித்தனர். தமிழக தரப்பில் கலந்து கொண்ட நாங்கள் மட்டும் ஸ்டேட் போட்டு கல்வித்திட்ட மாணவர்களின் நலனை மனதில் கொண்டு கருத்துக்களை தெரிவித்தோம். தேர்வு தேதியையும் நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளோம். அவர்கள் நேரடியாக கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்ற முறையை தான் அனைவரும் வலியுறுத்தினர்.

பள்ளி ஆசிரியர்களை முன்கள பணியாளர்களாக யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் வந்துள்ளது. அவர்கள் தொடர்பாக பள்ளி நிர்வாகம் கண்டிப்பாக விளக்கம் கேட்கப்படும் என்றும், யார் தவறு செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிப்பதில்  உள்ள இடையூறுகளை சரிசெய்ய விசாகா கமிட்டி அமைக்கப்பட உள்ளது. ஆன்லைன் கற்பித்தல் தொடர்பாக வரும் கருத்துக்கள் அந்த கமிட்டி மூலம் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும்.தமிழகத்தில் தொலைத்தொடர்பு வசதி 60 முதல் 70 சதவீதம்  உள்ளது. மணப்பாறை போன்ற இடங்களில் போன் இணைப்பு கூட கிடைக்காத நிலை உள்ளது.

அதனால், வாட்ஸ்ஆப் மூலமும், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலமும் மாணவர்களுக்கு பாடப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறேன். ஆன்லைன் பாடம் நடத்துவதில் உள்ள பிரச்னைகள் விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பார்வையிட்ட போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx