சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
தேசிய அறிவியல் தினத்தைபிப்ரவரி 28, முன்னிட்டு, கணித அறிவியல் நிறுவனம், சென்னை , தமிழ்நாடு அறிவியல் இயக்கம், உறையூர் கிளை மற்றும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து அறிவியல் திருவிழா இன்று சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது
வழக்கறிஞரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான வி. ரங்கராஜன் அவர்கள் அறிவியல் பார்வை ஏன் தேவை? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் தம் உரையில் சர்.சி.வி. ராமன் அவர்களின் ஒளி சிதறல் என்ற மகத்தான கண்டுபிடிப்பான ராமன்விளைவுகள் என்ற நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். நமது மண்ணின் மைந்தர், திருவானைக்காவலில் பிறந்த சர்.சி.வி. இராமன் அவர்கள் அறிவியலுக்கு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம்.
அறிவியல் என்பது உலகளாவியது. நமது நாடு அறிவியல் தொழில்நுட்பத்தில் பெரும் வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. அறிவியலை வளர்ப்பதும் பிறருக்கு வழங்குவதும் மனித சமூகத்தின் இயல்பு. அறிவியல் என்பது மந்திரமோ, தந்திரமோ அல்ல. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கு விடை காணவும், உற்றுநோக்குதல், கூர்ந்து கவனித்தல், திட்டமிடல் போன்றவையே அறிவியல் ஆகும் என பேசினார். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாதிரிகளை மற்ற மாணவர்களுக்கு காட்டி மகிழ்ந்தனர்.
சர்.சி.வி. ராமன் அவர்கள் முக உருவம் கொண்ட முகமூடிகளை அணிந்து தமது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.
பள்ளி தலைமையாசிரியர் . கே.எஸ். ஜீவானந்தன்
தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறையூர் கிளை செயற்குழு உறுப்பினர் . குழந்தைவேல், ஆசிரியர்கள் . வில்சன், சகாயராணி ஹேமலதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை . நா. உமா அவர்கள் நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய...