பால் பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை பணி தொடங்க ஆட்சியரிடம் மனு

பால் பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை பணி தொடங்க ஆட்சியரிடம் மனு

திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை பணியினை விரைந்து தொடங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பத்து ரூபாய் இயக்கத்தினர் மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி - தஞ்சாவூர் இடையே பால் பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை இல்லாமல் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருவழிச்சாலை நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டது.

அணுகு சாலை இல்லாத காரணத்தினால் நாள் தோறும் நடக்கும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பு மற்றும் நலச்சங்கங்களின் தொடர் கோரிக்கையினால் மத்திய, மாநில அரசுகள் அரசாணை வெளியிட்டன. சர்வீஸ் சாலை கூட்டமைப்பு பொதுநல வழக்கு தொடர்ந்து அணுகு சாலை அமைக்கலாம் என தீர்ப்பு பெற்றதுடன்

தொடர் முயற்சியால் ஆறு மாதங்களில் சாலை அமைக்க ஆவண செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இறுதி தீர்ப்பு வழங்கியது. சர்வீஸ் சாலை பணியினை சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து பணியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமைச் சட்ட ஆர்வளர்கள் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் MA,BL தலைமையில் கோரிக்கை முழக்கமிட்டனர். அமைப்புச் செயலர் வழக்கறிஞர் சேக்ஸ்பியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு பாஸ்கர், மாவட்ட செயலாளர் சேட்டு, மணச்சநல்லூர் ஒன்றிய துணை செயலாளர்கள் அர்ஜுன் குமார், செல்வகுமார்,

சிறுகனூர் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் மனோகரன், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ், ஆலோசகர் கோவிந்தராஜ், திருச்சி விக்னேஷ் நகர் நல சங்க பொருளாளர் கணேசன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், உமா ராமசாமி, ஜோசப் ஆரோக்கியராஜ், பாலகுமார், தங்கதுரை,

சண்முகவேல், சிவனருள் வினோதினி, லீலா, கொளசல்யி உட்பட பல சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision