திருச்சி மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாததால் அவதியுறும் கிராம மக்கள்

திருச்சி மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாததால் அவதியுறும் கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பை ஊராட்சியில் உள்ள பச்சைமலை பகுதியான சின்ன பழமலை மற்றும் பெரிய பழ மலை ஆகிய பகுதிகளுக்கு பேருந்து செல்ல முடியாத அளவிற்க்கு தார் சாலையானது படுமோசமாக குண்டு குழியுமாக உள்ளது.

இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி செய்வோர் ஆகியோர் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். மேலும் இந்த பகுதிகளுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தங்கள் மருத்துவ தேவையை பெறுவதற்க்கு துறையூர் வந்து செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளனர்.

அவசர  சூழ்நிலைகளில் இவர்களை அழைத்து செல்வதற்கு அவசர ஊர்த்திகள் கூட செல்ல முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஜல்லிகள் அப்படியே பெயர்ந்து குண்டும் குழியுமாக  உள்ளதால் நடப்பதற்கு கூட மிகவும் சிரமமாகவும் காலதாமதம் ஆகிறது.

எனவே துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டிள் உள்ள இந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO