தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய திருச்சி மாநகராட்சி

தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய  திருச்சி மாநகராட்சி

 திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பொது மக்கள் போக்குவரத்து  பாதிக்கும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் பார்க்கிங் வசதி குறைபாடுகள் காரணமாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு
இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினர்  அறிவுறுத்தியுள்ளனர்.

 அலெக்சாண்ட்ரியா சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க  மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்குள் வாகனங்களை நிறுத்தி சொல்ல வேண்டும்  என்று கூறியுள்ளனர்.

 இரண்டு நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு அதிகாரிகளின் காலனி நிர்வாகத்தால்   வாகனங்கள் நிறுத்த கூடாது என்பதற்காக வேலி அமைத்திருந்தனர்.மக்களின் புகாரின்பேரில்  போக்குவரத்து போலீசார் மற்றும் திருச்சி மாநகராட்சி தடுப்புகளை அகற்றி வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தினார்.

மக்களின் கோரிக்கையை ஏற்று வேலி அகற்றப்பட்டது அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள தெருவில் வாகனங்கள் நிறுத்துவது கண்காணிக்க மாநகர காவல் துறையினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நாங்களும் இதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று திருச்சி மாநகராட்சி 53 வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி தெரிவித்தார்.

சாலைகளில் கார்கள் நிறுத்த வேண்டாம் என திருச்சி மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர் செவ்வாய்க்கிழமை சாலை ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சில வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன.
 துணை காவல் ஆணையர்  முத்தரசு ஆய்வு செய்து அலெக்சாண்ட்ரியா சாலை மற்றும் பென் வெல்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சீரமைப்பு பணி நடவடிக்கைகளை பரிந்துரைத்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO