மூடி இல்லாத குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை
திருச்சி செம்பட்டு குடித் தெருவில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் பச்சை பாசன்கள் வளர்ந்து கொடியாகவும், மூடி இல்லாமல் இருப்பதால் காக்கா, குருவிகள் அசிங்கம் செய்வதோடு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தினமும் யாருக்கும் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. போர் போட்டு இருக்கும் பைப்பும் உடைந்து இருப்பதால் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னர் தக்க நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக் கொண்டுள்ளனர்.
150 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த தெருவில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை மாற்றி பெரிய தொட்டியாக கொடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision