நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6.45 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6.45 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த காட்டுப்புத்தூரை சார்ந்த ஐஜேகே திருச்சி வடக்கு மாவட்ட தலைவரும், சமூக ஆர்வலர் கருணாகரன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் செலவில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து காடுவெட்டி, சீலை பிள்ளையார் புத்தூர், ஸ்ரீராம சமுத்திரம், முடக்குசாலை, ஆலம்பாளையம் புதூர், கணபதி பாளையம், நாகையநல்லூர், மருதம்பட்டி, ஏலூர்பட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி, காட்டுப்புத்தூர் உள்ளிட்ட 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு திரையில் தெரியும் வகையில் இன்டர்நெட் இணைப்பும் கொடுக்கப்பட்டது.

11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராவின் கண்ட்ரோல் யூனிட் சாவியை கருணாகரன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் சங்கர், ராதா ஆகியோர் வசம் ஒப்படைத்தார். அப்போது காவல்துறை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூக அலுவலர் கருணாகரன் கூறுகையில்....., பொதுஇடங்களில் பாதுகாப்பு என்பது காவல்துறையை மட்டும் சார்ந்தது அல்ல. பொதுமக்களும் காவல்துறைக்கு உதவ வேண்டும். அந்த வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. காட்டுப்புத்தூர் சுற்று வட்டார பகுதியில் சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவரை கண்டறியவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

இதனை முன்மாதிரியாக கொண்டு இளைஞர்கள் தங்கள் பகுதியில் முயற்சி எடுத்து இது போன்ற கண்காணிப்பு கேமரா அமைப்பதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க இயலும் என்று கூறினார். ஐஜேகே திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் காட்டுப்புத்தூர் பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினராக ஐ.ஜே.கே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை எனக்கூறி வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision