கொரோனா மூன்றாவது அலை- திருச்சியில் நிலையை கட்டுக்குள் வைக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செய்ய வேண்டியது என்ன?

கொரோனா மூன்றாவது அலை- திருச்சியில் நிலையை கட்டுக்குள் வைக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செய்ய வேண்டியது என்ன?

கொரானா நோய்த்தொற்று முதல் அலையை விட இரண்டாவது அலையில் இந்தியாவில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டதோடு அதிக எண்ணிக்கையிலான மரணங்களும் ஏற்பட்டது.

 இந்நிலையில் தற்போது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவில் மூன்றாவது அலை வீசக்கூடும் என்று உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மூன்றாம் அலையானது அதிகளவு குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்ற ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர் 

தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம்,தமிழகத்தில் மூன்றாவது அலை தாக்கம் குறித்த  கேள்விக்கு,

தமிழகத்தைப் பொறுத்தவரை, 1.6 கோடி டோஸுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் குறுகிய நாள்களில் 5 கோடி டோஸ்கள் செலுத்தும் நோக்கில் பணியாற்றி வருகிறோம். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து மற்றொரு புறம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாகியிருக்கும் ஆன்டிபாடி ஆகியவற்றின் மூலம் மூன்றாம் அலையையும் அதன் தீவிரத்தையும் முடிந்த அளவு தடுக்க முயல்கிறோம்" என்றார் அவர்.புதிய அலை தொடங்கிய அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அதிக கவனத்துடன் அதைக் கையாள வேண்டும்"

இரண்டாம் அலையின்போது அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துவிட்டோம். எனவே, பொதுமக்கள், நிர்வாகம் அனைத்தும் அதிக கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்றார்.

இதன் அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலை- திருச்சியில் நிலையை கட்டுக்குள் வைக்க மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செய்ய வேண்டியது என்ன?என்ற கேள்விக்கு திருச்சி விஷன் குழுமம் பொதுமக்களிடம் கருத்தை பதிவுசெய்தது.

 பொதுமக்கள் அவர்களுடைய கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர் அவை பின்வருமாறு.

ஆபிரகாம்

 முல்லைநகர்.

முதல் அலை ஏற்பட்ட போது நம்மிடம் தடுப்பு ஊசி போன்ற எவ்வித பாதுகாப்பிற்கான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்தது.

 இரண்டாவது அலையை கட்டுப்படுத்த இயலாத போதும் நம்மிடம் தடுப்பூசி வந்து விட்டது தற்போது தடுப்பூசிகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செயல்பட வேண்டும் என்றார்.

கனக சுப்பிரமணியம்

 தில்லைநகர்.

தடுப்பூசி போடுவதில் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியும் முறையான திட்டமிடுதலை கையாளவேண்டும.

 தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை குறைப்பதற்கு அதுவே வழிவகுப்பதாகும். என்றார்.

கீதா 

தில்லைநகர் 

ஊர் அடங்ககில் கொண்டுவந்துள்ள அளவுகளை தளர்வுகளை குறைக்க வேண்டும். மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனைகளை அதிகப்படுத்துதல் வேண்டும் என்றார்.

ஷெர்லி தீபக் 

திருச்சி

தடுப்பூசி முகாம்களில் நேரத்தை அதிகப்படுத்துவதோடு எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்தல் வேண்டும்.

 இரவு நேரங்களில் கூட அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி கிடைப்பதற்கான வழி வகையை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுதல் வேண்டும்.

நரேஷ் 

திருச்சி   

தூய்மைப் பணியாளர்கள் உடைய பணிச்சுமையை பொது மக்களுக்கு உணர்த்தவேண்டும். காவல்துறையினர் தண்டனையாக தூய்மைப் பணியாளர்கள் செய்யும் பணியை ஒரு மணிநேரம் பொதுமக்களை பார்க்கச்செய்து அவர்களுடைய துயரங்களை புரிந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

முகமது ஆசிப் 

திருச்சி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை மாநகராட்சி சரியான திட்டமிடலோடு கண்காணித்தல் அவசியம்.

பிரபாகரன் 

திருச்சி 

தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு கபசுரக் குடிநீர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிடைக்கும் வழி செய்தல் வேண்டும்.

முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்று பரவாது என்ற நம்பிக்கையில் பலரும் இருக்கிறார்கள் தடுப்பூசி போட்டால் மீண்டும் தொற்று வருமா வராதா என்ற விளக்கத்தை பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் கொடுக்க வேண்டும்

திருவேங்கடம் 

அல்லூர்  

தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு மாநகராட்சி வார்டுகளுக்கும் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்

ஊசி போடாத முதியவர்களை அழைத்துச்செல்ல இலவச வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்

குளிர்ந்த உணவுப் பொருட்கள் தின்பண்டங்கள் அதாவது ஐஸ்கிரீம் போன்ற வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் என்றார்.

அனைத்து அம்மா கேன்டீன்களில் ஊட்டச்சத்து மிக்க பயிர் வகைகள் சுண்டல் வகைகள் சுண்டல் வகைகள் மூலிகை தோசைகளை விற்க வேண்டும்  

பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.

சிவக்குமார் 

சாத்தனூர்.

மாநகருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அவர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டதற்கு சான்றிதழ் சரிபார்க்க வேண்டும்.

துரிதமான முறையில் அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி படுத்த வேண்டும்.

பெரிய பெரிய வணிக வளாகங்களில் கூட்டத்தை தவிர்க்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றார்.

ஜனார்தனன் 

பீமநகர்

 அறுபது வயதுக்கு மேற்பட்ட பலர் இன்றளவும் தேவையற்ற பயத்தின் காரணத்தினால் கொரானா தடுப்பூசி 88 சதவீத திருச்சி வாழ் மக்கள் போட்டுக் கொள்ளவில்லை . உடனடியாக திருச்சி மாநகராட்சியில் வாழும் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளதவர்களினின் பெயர் பட்டியலை இப்போதே தயார் செய்து கொரானா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பத்குமார்

பெரியார் தெரு

குழந்தைகளை எந்த ஒரு சூழ்நிலையிலூம் விழாக்களுக்கு அழைத்து செல்ல கூடாது. பெரியோர்கள் அனைவரும் இரண்டு அலைகலை சந்தித்த அனுபவம் இருக்கும் அனைவரும் தனிமை படுத்தி கவனம்மாக இருக்க வேண்டும்.

 குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மாநகராட்சி ஆக திருச்சி இருக்கிறது . சிறப்பு நடவடிக்கை எடுத்து குப்பையில்லா மாநகராட்சி ஆக மாற்ற வேண்டும் .  

S.சுரேஷ் 

ஸ்ரீரங்கம்

   பெற்றோர்கள் ரொம்ப கவனம்மாக குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பார்த்து கொள்ளவும். பெற்றோர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு மாநகரட்சி குப்பை எடுக்கும் மினி வேன் ஒளி பெருக்கி மூலம் அனைத்து பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு வழி வகையா இருக்கும்.

நாகராஜன் 

ஸ்ரீரங்கம்

தற்பொது உள்ள சூழ்நிலையில்

ஆட்சியாளர் பொறுப்பு

 தடுப்பு ஊசியை தன்னுடைய மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி செலுத்தபட்டுள்ளதா என்ற தகவலை அறியவேண்டும். இல்லை எனில் செலுத்த படாத பகுதிக்கு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.             

பேருந்து இயக்குவதை அடியோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:

https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH