ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேசன் நடத்தும் மாணவர்களுக்காக "வெற்றிக்கு வழிகாட்டுவோம்'' என்ற கல்வி வழிகாட்டி முகாம்

ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேசன் நடத்தும் மாணவர்களுக்காக "வெற்றிக்கு வழிகாட்டுவோம்'' என்ற கல்வி வழிகாட்டி முகாம்

திருச்சி ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேசன் கடந்த 5 வருடங்களாக 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக "வெற்றிக்கு வழிகாட்டுவோம்' என்ற கல்வி வழிகாட்டி சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக எந்த கல்லூரியில் படித்தாதால் தங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று  தீர்மானிக்க தடுமாறுகிறார்கள், எந்தப் பாடப்பிரிவுகளை எடுத்தால் வேலை வாய்ப்புகள் சரிவர கிடைக்கும் என்ற அச்சம் காரணமாக எம்பிபிஎஸ் மற்றும் பொறியியல் போன்ற ஒரே படிப்புகளையே சேரத் தீர்மாணிக்கின்றனர்.

அவ்வாறு தடுமாறாமல் வெவ்வேறு பாடங்களில் சேர்ந்து தங்களது வேலை வாய்ப்பினை தக்க வைத்து தங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் வகையில் திருச்சியில் இயங்கி வரும் ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் "வெற்றிக்குக்கு வழிகாட்டுவோம்" என்ற  கல்வி வழிகாட்டி முகாம் திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியில் இயங்கி வரும் உருது மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 18.7.2021 மற்றும் 19.7.2021 நடைபெற்றது.

இந்நிறுவனம் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் நேர்காணலுக்கு தகுதியான மாணவர்களாக பயிற்சியினைக் கொடுத்து திறமையான மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள். மேலும் இவர்கள் இலவச கணினி பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் syed ajaz, தலைவர் அமீன், செயலாளர் ஆஷிக், பொருளாளர் ஆபிதின், துணை செயலாளர் ஷாருக்கான் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி தங்களது சொந்த செலவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு இலவச  உணவுகளையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆர்வமுள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச தையல் பயிற்சி கொடுக்க தீர்மானித்துள்ளனர். இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு பயன் பெறுவார்கள். ஹெல்பிங் ஃபேன்ஸ் பவுண்டேசன் நிறுவனர் syed ajaz  கூறுகையில்‌... அரசு சார்பில் தங்களது நிறுவனத்திற்கு ஆதரவும் சலுகைகளும் கிடைத்தால் இன்னும் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளை சிறந்த முறையில் செய்து தர முடியும் என்று கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I