அக்டோபர் ஒன்று முதல் அடுத்த அதிரடி ஆரம்பம் !!

Sep 17, 2023 - 11:55
Sep 17, 2023 - 12:00
 1468
அக்டோபர் ஒன்று முதல் அடுத்த அதிரடி ஆரம்பம் !!

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதிவதைத் தடுக்கவும், விடுபடுதலின்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணப்பதிவுத்துறையில் ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, காலி மனையிடங்களை ஜியோ கோ-ஆர்டினேட்சோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று கடந்த வாரத்தில் அறிவுரை வழங் கப்பட்டது. இந்நிலையில் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக் கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்யப்படுவதாக அதிகமாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் எல்லா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப் படம் ஜியோ கோ-ஆர்டினேட் சோடு எடுக்கப்பட்டு அதை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறையானது அக்டோபர் 1ம் தேதி முதல் எல்லா சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பத்திரிப்பதிவுத்துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோனோர் கள ஆய்விற்கு செல்வதில்லை கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தரகர்கள் தொல்லைவேறு என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வந்தநிலையில் அரசு தற்பொழுது இப்படி ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision