ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் சேர்க்கைத் தேர்வில் திருச்சி மாணவி தேர்வு.

ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் சேர்க்கைத் தேர்வில் திருச்சி மாணவி தேர்வு.

தேசிய தொழில்நுட்பக் கழகம், சென்னை சார்பில் (11.02.2024) அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் சேர்க்கைத் தேர்வில், திருச்சிராப்பள்ளி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் இளநிலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி செல்வி நத்ஹர் ரஃபியா நூரி தேர்வாகியுள்ளார். அதுமட்டுமின்றி தேசிய அளவில் 48 ஆம் இடத்தையும் தனிச்சிறப்பு நிலையுடன் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழில்நுட்பக் கழகம் சார்பில் ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் சேர்க்கைத் தேர்வு (Joint Admission Test for Masters - JAM) நடத்தப்படும். அவ்வகையில் 2024ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் சேர்க்கைத் தேர்வில் 13086 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுள் நத்ஹர் ரஃபியா நூரி 48ஆம் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டுதற்குரியது.

அயராத உழைப்பும் கல்லூரி நிர்வாகம் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் தான் இவ்வெற்றிக்குக் காரணம் என மாணவி நத்ஹர் ரஃபியா நூரி கூறினார். அறிவியல் பாடத்தில் ஆழமான புரிதல் இருந்ததால் தேர்வில் வெற்றிபெற முடிந்தது என்றார். மேல்நிலைப் பள்ளிப்படிப்பில் இருந்தே பெருவாரியான வினாக்கள் கேட்கப்பட்டன.

ஆகவே இனி இத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் இதனை நினைவிற் கொள்ளவேண்டும் எனவும் கூறினார். வெற்றிபெற்ற மாணவியை சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி நிர்வாகிகள், முதல்வர், பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision