ஜூனியர் ரெட் கிராஸ் திருச்சி நகர வட்டார அளவிலான போட்டிகள் - பரிசளிப்பு விழா

ஜூனியர் ரெட் கிராஸ் திருச்சி நகர வட்டார அளவிலான போட்டிகள் - பரிசளிப்பு விழா

தொடக்கக் கல்வித்துறை, திருச்சி நகர சரக ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் பாலக்கரை ஹோலி ரெடீமர்ஸ் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அரசுத்தேர்வுகள் துறை, உதவி இயக்குனர் கோ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவ மாணவிகளுக்கு கட்டுரைபோட்டி, ஓவியபோட்டி, பேச்சுப்போட்டி, யோகாசனங்கள் ஆகியவைகளில் ஒன்றிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை மாணவர்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜோசப் அந்தோணி மற்றும் அர்ஜுன், திருச்சி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் முகமது ஷபி ஆகியோர் வழங்கி மாணவர்களை பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள் அமல்சேசுராஜ், சிராஜூதீன் சிறப்புரை ஆற்றினர்.

தலைமையாசிரியை ஜாக்குலின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியர் குழந்தைசாமி வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் ஜீவானந்தன் நன்றியுரை ஆற்றினார். திருச்சி நகர சரக நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள JRC மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision