பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெறப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெறப்படும் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி,
கடந்த காலங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்பட்டு வந்த,
நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று நடவடிக்கை
எடுக்கும் மக்கள் குறைதீர்ப்பு நாள் நிகழ்ச்சி, கொரோனா பரவல் அதிகம் 
காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து கடந்த காலங்களில் ஒவ்வொரு 
திங்கட்கிழமையும் பொது மக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்திட அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் 04.10.2021 திங்கட்கிழமை தொடங்கி ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்ப்பு நாளில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் நேரடியாக பெறப்படும். பொதுமக்கள் 
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரடியாகக் கொடுத்து தீர்வு காண கோரப்படுகிறார்கள்.

மனுக்கள் கொடுக்கவரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கொரோனா நிலையான வழிகாட்டு 
நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn