திருச்சி மாவட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி - ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜல் ஜுவன் மீஷன் திட்டத்தின் கீழ் 9 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளுக்கு ரூபாய் 69.41 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் , முள்ளிப்பாடி , அரங்கூர் , சீனிவாசநல்லூர் , எம்.புதூர் , நத்தம் , காடுவெட்டி , முருங்கை , உன்னியூர் , சீலைபிள்ளையார்புதூர் ஆகிய ஊராட்சிகளில் ஜல் ஜுவன் மீஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது .

தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் , முள்ளிப்பாடி ஊராட்சி , திருமலையூர் கிராமத்தில் ஜல் ஜுவன் மீஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 7.82 இலட்சம் மதிப்பீட்டிலும் , அரங்கூர் ஊராட்சி , அனியாப்பட்டி கிராமத்தில் ரூபாய் 9.33 இலட்சம் மதிப்பீட்டிலும் , சீனிவாசநல்லூர் ஊராட்சி சீனிவாசநல்லூர் கிராமத்தில் ரூபாய் 10.60 இலட்சம் மதிப்பீட்டிலும் , எம்.புதூர் ஊராட்சி , தொட்டியப்பட்டி கிராமத்தில் ரூபாய் 15.42 இலட்சம் மதிப்பீட்டிலும் , நத்தம் ஊராட்சி , மூங்கில்துறை கிராமத்தில் ரூபாய் 4.38 இலட்சம் மதிப்பீட்டிலும் , காடுவெட்டி ஊராட்சி , காடுவெட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும் , முருங்கை ஊராட்சி , மருதம்பட்டி கிராமத்தில் ரூபாய் மதிப்பீட்டிலும் , உன்னியூர் ஊராட்சி உன்னியூர் கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருவதையும் , சீலைபிள்ளையார்புதூர் ஊராட்சி , சீலைபிள்ளையார்புதூர் கிராமத்தில் ரூபாய் 19.44 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 69.41 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு தரமானதாகவும் விரைந்து முடித்து விரைவில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு குடிநீர் வழங்கவேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார் .

 Advertisement

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ச.பா.பாபு அண்ணாதுரை , வெ.ஸ்ரீதர் உதவி செயற்பொறியாளர், சுப்ரமணி , மாதவன் , கலாவதி, பொறியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர் .