பினாமிகளின் கவனத்திற்கு... வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைதிருக்கலாம்.. வருமான வரி விதிகள் என்ன?
சேமிப்பு என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம் நமக்கென ஒரு வீடு கையில் கொஞ்சம் பணம் மகனின் படிப்பு செலவுகள் மகளுக்கு திருமண செலவும் அன்றாட வாழ்க்கை இப்படி நம்முன்னோர்கள் பழக்கப்படுத்திவிட்டே சென்றிருக்கிறார்கள், ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் எனவும் அவர்களே சொல்லிச்சென்றிருக்கிறார்கள், அவர்கள் சொன்னது இருக்கட்டும் வருமான வரித்துறை வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், தங்கத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இப்படிப்பட்ட கேள்வி எழுவது இயற்கைதானே இந்தக் கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போமா கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாஹுவின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 290 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர நகைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பதுதானே உங்கள் கேள்வியாக இருக்கும்.
முதலில் தங்கத்தைப் பற்றி பார்ப்போம். இந்தியர்கள் தங்கத்தின் மீது ஒரு சிறப்புப்பற்றுதலைக் எப்பொழுதும் கொண்டுள்ளனர், அது ஒரு உலோகம் மட்டுமல்ல, பாரம்பரியம் முதல் முதலீடு வரை பிடித்ததாகவும் நம்பகமானதாகவும் கருதப்படுகிறது. வீட்டில் தங்கம் வைப்பதற்கு வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) சில விதிகள் உள்ளன. இதன்படி இந்த வரம்பு வெவ்வேறு வகைகளுக்கு வேறுபட்டது.
திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் தங்கத்தை வைத்திருக்கலாம் அதாவது 62.5 சவரன் நகைகள் திருமணமாகாத ஒரு பெண் தன்னிடம் 250 கிராம் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம் அதாவது 31ணே கால் சவரன். ஒரு ஆண் (திருமணமான அல்லது திருமணமாகாத) 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும். இருப்பினும், இந்த வரம்பிற்கு மேல் தங்கத்தை நீங்கள் வைத்திருக்கலாம், ஆனால் இந்தத் தங்கம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான பதில் உங்களிடம் இருக்க வேண்டும்.
அதேபோல சமீப காலங்களில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக இருப்பதால், பல மக்கள் இன்னும் பணத்தை வீட்டில் வைத்திருக்கும் பாரம்பரிய முறைகளை கடைபிடிக்கிறார்கள். ஒரு வீட்டில் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளன. வருமான வரிச் சட்டப்படி வீட்டில் எவ்வளவு பணம் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்று வரம்பு விதிக்கவில்லை, ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினால், அந்த பணத்தின் ஆதாரத்தை ஒருவர் சமர்ப்பிக்க வேண்டும். வருமானத்தில் கணக்கில் வராத பணம் இருக்கக் கூடாது, வீட்டில் வைத்திருக்கும் பணத்திற்கு ஆவணங்கள் பொருந்தவில்லை என்றால், வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த நபருக்கு அபராதம் விதிக்கலாம்.
கணக்கில் காட்டப்படாத பணத்தை வருமான வரிப்பணியாளர்கள் சில சூழ்நிலைகளில் கைப்பற்றினால், கைப்பற்ற மொத்தப் பணத்தில் 137 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் வந்ததற்கான வரலாறும் வருமான வரியும் நாட்டுக்கு முக்கியம் அல்லவா !.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision