பெட்ரோல் குண்டு வீச்சு:விசிகவினர் சாலை மறியல்- கைது

பெட்ரோல் குண்டு வீச்சு:விசிகவினர் சாலை மறியல்- கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் புதுக்கோட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து 19 ந்தேதி இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் மலையூா் கடைத் தெருவில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி அசோகன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் இளமதி அசோகன் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விசிகவின் திருச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார் .

இதனைத் தொடா்ந்து, சாலை மறியலை கைவிடபோலீசார் வலியுறுத்தியும் கலைந்து செல்ல மறுத்த ஒரு பெண் உட்பட 29 பேரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விசிக நிர்வாகிகளை உத்தமர் கோயில் திருமண மண்டபத்தில் அடைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision