கல்லணையில் இருந்து 6 ஆறுகளுக்கு தலா 500 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர்

கல்லணையில் இருந்து 6 ஆறுகளுக்கு தலா 500 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர்

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று கல்லணை வந்த காவிரி நீரை கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தலா 500 கன அடி வீதம் முதல் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், நகர்புறம் மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று தண்ணீர் திறந்து விட்டனர்.

முன்னதாக பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் காவிரி நீருக்கு மலர் தூவி வரவேற்றனர். இதன் மூலம் தஞ்சையில் 1.4 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 89 ஏக்கர் என மொத்தம் 3.5 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்ய இலக்கு.

கல்லணையிலிருந்து லோகல் அளவு தண்ணீர் வந்தவுடன் காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாயில் 2 ஆயிரம் கனஅடி வீதம், கொள்ளிடத்தில் 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்ல பத்து நாட்களாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve