திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.

 

மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் புடைசூழ மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .

 

இந்நிகழ்வில் மாநகரக்கழகச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணைஅரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision