திருச்சி இரயில்வே பாதுகாப்பு படை - தீவிர நாசவேலை எதிர்ப்பு சோதனை
நாளை மறுநாள் (26.01.2025) குடியரசு தினம் - 2025- கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை எதிர்ப்பு சோதனை நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில்
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K.P. செபாஸ்டியன் மற்றும் G.ரவிச்சந்திரன், SIPF/TPJ, K.மாசிலாமணி, ASIPF/TPJ தலைமையில் நடைபெற்ற சோதனையின் போது ரயில் நிலையம் மற்றும் வளாகம், பார்சல் அலுவலகம், காத்திருப்பு கூடம், ஸ்கேனர், விஐபி நுழைவு மற்றும் பயணிகள் உடைமைகள் சரிபார்க்கப்பட்டது.
இச்சோதனையின் போது சந்தேகத்திற்குரிய/அசாதாரணமான எதுவும் கவனிக்கப்படவில்லை. மேலும் திருச்சி வெடிகுண்டு கண்டறியும் படை, திருச்சி மோப்ப நாய் படை மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision