சூறாவளி காற்றினால் சேதமடைந்த வாழை, பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

சூறாவளி காற்றினால்  சேதமடைந்த வாழை, பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

முசிறி தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியில் சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது இதில் சீலை பிள்ளையார்புத்தூர், ஸ்ரீராமசமுத்திரம், காடுவெட்டி என் புத்தூர் அரசலூர் பாலசமுத்திரம் மணமேடு சீனிவாசநல்லூர் உன்னீயூர், ஸ்ரீராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றினால் சுமார் 3 -லட்சம் வாழைகள், வெற்றிலை கொடிகள் தென்னை மரம், உள்பட விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் சேதம் அடைந்தது.

இதனை விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் மோகனூர் கே. பாலசுப்ரமணியன், நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய மேலும் இப்பகுதி விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மேலும் விவசாயிகளுக்கு இலவச உரம்,வாழைக் கன்றுகள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

இந்த நிகழ்ச்சியில் விவசாய முன்னேற்றக் கழக அரசியல் உயமட்டத் தலைவர் கே.ராமசாமிநாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் எம்.முத்தரசன்விவசாய முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எஸ். மாதவன் விவசாயி காடுவெட்டி ராஜமாணிக்கம், உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision