மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6000 ஆமைகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 6000 ஆமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், இரண்டு பயணிகள் உயிருள்ள ஆமைகளை கடத்திவந்துள்ளனர். 

இதனை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த உயிருள்ள ஆமைகள் குறித்த தகவல்களை வனத்துறையினருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

வனத்துறையினர் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆமைகளை கைப்பற்றி தங்களது விசாரணையை தொடர உள்ளனர். 3 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆமை குஞ்சுகளை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்த முகமது அசார், இராமநாதபுரம் அபீப் நாசர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn