திருச்சி 2வது தலைநகர் - அதிமுக குழுவிடம் மனு

திருச்சி 2வது தலைநகர் - அதிமுக குழுவிடம் மனு

அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உடனான கலந்தாலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மத்திய அரசு சார்ந்து தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் குறித்த 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கழக அமைப்பு செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் மற்றும் குழுவினரிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனை சட்டம் என்பதை பெயர் மாற்றம் செய்ய முடிவை ரத்து செய்ய வேண்டும், திருச்சி இரண்டாவது தலைநகராக வேண்டும், பெல் தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை தடுக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision