முன்னாள் ஜனாதிபதி படித்த கல்லூரியில் மனித நேயத்தை வலியுறுத்தி மனித சங்கிலி

முன்னாள் ஜனாதிபதி படித்த கல்லூரியில் மனித நேயத்தை வலியுறுத்தி மனித சங்கிலி

வருடம் தோறும் அக்டோபர் 15ம் தேதி மறைந்த இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய முக்கியமான வார்த்தை கனவு காணுங்கள் என்பதுதான்.

இந்தியாவில் உலக நாடுகளில் வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் கனவோடு செயலாற்றியவர். இன்று இந்தியா முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் படித்த திருச்சி ஜோசப் கல்லூரியில் மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் மனித சங்கிலி கல்லூரி முதல்வர் மரியதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரி செயலர் அமல், பேராசிரியர் மைக்கேல் சமனேசு, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் JCC, NCC மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision