திருச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
பாராளுமன்ற தேர்தல் 2024 பிரச்சாரம் சூடு பிடித்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற தேர்தலுக்காக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், அந்த கட்சியைச் சேர்ந்த 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியவாறு அனுமதி பெறாத சுமார் 25 இருசக்கர வாகனங்களில்
அந்த கட்சியின் கொடி மற்றும் பிளக்ஸ் பேனர்களை கட்டிக்கொண்டு காலை 10:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை திருச்சி இ.பி.ரோடு, கிழக்கு ஆண்டாள் வீதி மற்றும் பட்டர்வொர்த் ரோடு ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக கோட்டை காவல் நிலையத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி எஃப் எஸ் டி குழு பொறுப்பாளர் சாதிக் பாஷா புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு, உறையூர் பகுதி தலைவர் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision