என் ஐ டி கல்லூரியில் ஃபெஸ்டம்பர் விழா தொடக்கம்
திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெறும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான பெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது. இந்த விழாவானது 26 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை நடக்கவுள்ள போட்டிகள் முதல் பிரமாண்டமான நிகழ்ச்சிகள் வரை பெஸ்டெம்பர் கொண்டுள்ளது. பெஸ்டம்பரின் தொடக்க விழாவிற்கு என் ஐ டி மாணவர் நலன் டீன் கார் வேம்பு தலைமை வைத்தார் பேராசிரியர் நல ஆலோசகரும், பெஸ்டமர் ஒருங்கிணைப்பாளருமான பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
திருச்சி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்....... இந்த கலாச்சார விழா சமூகத்தில் ஒரு குடும்பமாக உள்ளது. தாய் தந்தை தனது கலாச்சாரத்தை தனது அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வார்கள் அவர்கள் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வார்கள் என்றும், இப்படி தாங்கள் கற்ற அனுபவங்களையும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாக இந்த கலாச்சார விழா நடைபெறுகிறது.
மேலும் இங்கு பல தரப்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று கூடுவதால் பல்வேறு கலாச்சாரங்களும் அனுபவங்களும் மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த விழாவில் பொறியியல் கல்லூரி மட்டுமல்லாது, மருத்துவ கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி என பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் பொழுது அவர்களுக்குள் ஒரு புதிய உறவு உருவாகும்.
மேலும் அந்த நட்பின் இதன் மூலம் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் மேலும் இந்த பெஸ்டம்பர் விழா மனித உறவை வளர்ப்பதற்கு இது அடித்தளமாக அமையும். மேலும் பல தரப்பட்ட கலாச்சார மற்றும் பழக்கவழக்கங்களை மாணவர்கள் தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறியதோடு, மேலும் மாணவர்கள் இந்த விழாவில் வெற்றிபெற அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பெஸ்டம்பரைத் தொடங்குவதற்கும், மாபெரும் திறப்பு விழாவைக் கொண்டுவருவதற்கும் திருச்சி என் ஐ டி கல்லூரி இசைக் குழு மற்றும் நடனக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் என்ஐடி மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision