ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை - தேவலாய வழிப்பாட்டிற்க்கு அனுமதி திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை - தேவலாய வழிப்பாட்டிற்க்கு அனுமதி திருச்சியில் பாஜகவினர் சாலை மறியல்

ஆடி பெருக்கை யொட்டி இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து  ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் முன்பாக திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க வினர், அதன் மாவட்டத் தலைவர்  ராஜேஷ் குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் காவேரி ஆற்றில் வழிபாடு செய்ய தமிழக அரசால் அனுமதி  மறுக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி மறுக்கப்படாத  நிலையில், வேண்டுமென்றே தமிழர்களின் பாரம்பரிய ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட தடை விதித்துள்ளது தமிழக அரசு எனவும்,  அதேபோல வேண்டுமென்றே இந்து ஆலயங்களை மூடி உள்ளது கண்டிக்கத்தக்கது. நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி வழக்கமான நடைமுறைப்படி அம்மா மண்டபத்தில் நடைபெற வேண்டும் அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மா மண்டபம் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில்  சிறப்பு வழிபாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.ஆடி 18 தினத்தில் காவிரிதாய்க்கு ஸ்ரீரங்கம் கோவிலிருந்து தடை செய்வது என்ன நியாயம் என்று  கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
 இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn