தமிழகத்திற்கு முன்மாதிரியாக திருச்சியில் சாலையோர உணவு கடைகள் அமைக்கப்படும் - உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பேட்டி

தமிழகத்திற்கு முன்மாதிரியாக திருச்சியில் சாலையோர உணவு கடைகள் அமைக்கப்படும் - உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பேட்டி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், பங்கேற்ற மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு பேசுகையில்.. திருச்சி மாவட்டத்தில் சாலையோர உணவு கடை நடத்தி வருபவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பாதுகாப்பு அம்சங்கள் சுகாதார உரையைக் கையாளுதல் குறித்த பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் அவர்களுக்கு தூய்மையான முறையில் உணவு சமைப்பது சத்தான பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளோம். கடந்த மூன்று மாதங்களில் திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 125 கடைகளை சீல் வைத்துள்ளோம்.

ஊரக பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மிக மிக மோசமான, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் டீத்தூள் பறிமுதல் செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. RUCO ( சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்யும் திட்டம் ) திருச்சி மாவட்டத்திலும் துவங்க உள்ளோம்.

இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் பயன்படுத்திய எண்ணெயை வீட்டில் சேமித்து வைத்து சமைத்த எண்ணெயை, நிறுவனத்தின் நபர் கடைக்கு வரும் போது அதைக் கொடுக்கலாம். மறு சுழற்சி செய்யும் சமையல் எண்ணையை பையோ டீசலாக மாற்ற உள்ளோம்.

செக்கு எண்ணெய் என்று கூறி அதில் பாமயிலை கலப்படம் செய்து விற்பனை குறித்து ஆய்வு செய்து  வருகிறோம். தின்பண்டங்களை தயாரிப்பு தேதி இல்லாமல் பாக்கெட் போட்டு  விற்பனை செய்யப்பட்டால் அந்த பொருளின் உற்பத்தியாளருக்கு  அபராதம் விதிப்பதோடு, அவரிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்றுக் கொள்கிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn