மாவட்ட ஆட்சியரின் அசத்தல் போன் - ஆச்சரியத்தில் அதிகாரிகள்
திருச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பிரதீப் குமார் கடந்த மாதம் 16ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வரும் இவர் தமிழகத்திலேயே முதல் முறையாக Push To Talk முறையில் நவீன புதிய வகை போனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் திட்ட துறைகளில் உள்ள அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிக்கவும், மக்கள் குறைகளை தீர்க்கவும், மனுக்கள் மீதான நிலையை அறியவும் (புஷ் டு டாக்) புதிய வகை போனை பயன்படுத்தி வருகிறார் ஆட்சியர்.
முதலில் (35 செட் ) 35 பேருக்கு இந்த போன் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இதுவும் ஒரு வகை மொபைல் போன் தானே இதைவிட இதில் என்ன பெரிய வேறுபாடு புதிய அம்சம் என கேட்கலாம் அனைவரும். பல புதிய அம்சங்களும் பல்வேறு வேறுபட்ட தொழில்நுட்பங்களும் இதில் உள்ளது.
முதலில் இந்த போனுக்கு எண் கிடையாது. பெயர் மட்டுமே சேமிப்பு செய்து அழைக்க முடியும். தனியாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேசலாம் . ஒட்டுமொத்த அதிகாரிகளிடமும் பேச முடியும். அதிகாரிகள் ஏதேனும் ஆய்வு பணியை மேற்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் இருக்கும் இடங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆட்சியர் முக்கிய தகவல்களை அதிகாரிகளுக்கு குறிப்பிடும்பொழுது அதிகாரிகள் வேறு பணியில் இருந்தால் இதில் 20 முறை தொடர்பு கொண்டு பேசியவர்கள் வாய்ஸ் ரெகார்ட் இதில் பதிவாகி இருக்கும். மீண்டும் அதனை கேட்டு கொள்ளும் வசதி உள்ளது. அதை விட இரவு நேரத்தில் மணல் மற்றும் திடீரென நடத்தும் ஆய்வு உள்ளிட்டவைகளில் அதிகாரிகள்,(பெண் அதிகாரிகளுக்கும்) பாதுகாப்பிற்க்கு இதில் ஒரு முக்கியமான சிஸ்டம் இதில் உள்ளது.
அதிகாரிகளுக்கு சோதனை நடத்தும் பாதுகாப்பில் அச்சம் வந்தால் போனில் உள்ள ஆரஞ்சு கலர் பட்டனை அழுத்தினால் போதும் திருச்சி மாவட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை மணியுடன் அவர்கள் இருக்கும் இடம் மற்றும் தகவலும் வந்துவிடும். அவர்களுக்கு ஏதும் ஆபத்து இருந்தால் உடனடியாக அவர்களை மீட்பது மற்றும் கூடுதலாக அதிகாரிகள் அங்கு அனுப்பவும் வசதி உள்ளது. டவர் கிடைக்காத இடங்களில் பேசுவதற்க்கு வேறு ஒரு சிஸ்டம் மாற்றினால் போதும் பேச முடியும் என குறிப்பிட்டார்.
முதல் கட்டமாக தற்பொழுது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்டவர்களிடம் இந்த வகை போன் உள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சி மற்றும் காவல்துறையினருடன் போனை இணைக்கு வசதியும் ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றார். இந்த போன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது .இதற்காக பிரத்யேகமாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தனியாக அரசு அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தக்கூடியது. பொதுமக்கள் யாரும் இந்த வகை போனை பயன்படுத்த முடியாது, பயன்படுத்தவும் கூடாது.
மாவட்ட ஆட்சியர் இந்தியாவில் எங்கு இருந்தாலும் இந்த வகை போனில் பேசிக் கொள்ளலாம். சிறிய வாக்கி டாக்கி போல் உள்ள இந்த போனில் டச் ஸ்கிரீன் மூலம் பெயர்களை தேர்ந்தெடுப்பதும் கால் செய்வதும் முடியும். பேரிடர் காலங்களிலும் மிக அதிகமான கூட்ட நெரிசல் மற்றும் விபத்து நேரங்களிலும் இந்த போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கடல் பயணத்திலும் இதனை பயன்படுத்தலாம். புஷ் டு டாக் இந்த போன் செட் ஒன்றின் விலை 24 ஆயிரம் ரூபாய். தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நம்மிடம் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO