விஜயகாந்த் நலம் பெற மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

விஜயகாந்த் நலம் பெற மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்தனர்.

முன்னதாக திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகி ஆர்.கே.ராஜா தலைமையில், விஜயகாந்த்தின் பெயர், ராசிக்கு சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்கள் பின்னர் கோவில் வெளி மண்டபத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision