கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விட்டு உள்ளதால், பழைய இரும்பு பாலம் உடைக்கப்பட்டு அதில் கீழே சிமெண்ட் கட்டைகள் ஆற்றில் கிடைக்கிறது.

தண்ணீர் ஓடுவதால் அது தடுப்பணை போல் குளிப்பதற்கு சிறு அருவி போல் கொட்டி வருவதால் ஆசையாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் அங்கே குளிக்க வர துவங்கி விட்டனர். திருச்சி ஆர் சி பள்ளியை சேர்ந்த சாம்ரோஜ் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் குளிக்க சென்றுள்ளார்.

நண்பர்கள் கண் முன்னே சாம்ரோஜ் நீரில் மூழ்கியுள்ளார். 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு இவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரை மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை நாளை காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கும். மிக முக்கியமாக அந்தப் பகுதியில் 50 அடியில் இருந்து 80 அடி வரை ஆழம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆற்றில் சிக்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்கப்பட்டான். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து வரும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும், யாரும் கண்டு கொள்ளாமல் அங்கே குளிக்க வருகின்றனர். கடந்த வாரமும் இதேபோல் 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision