திருச்சியில் அரிசி வியாபாரியிடம் ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் ஆன்லைனில் மோசடி

திருச்சியில் அரிசி வியாபாரியிடம் ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் ஆன்லைனில் மோசடி

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்த வர்ரஞ்சித் குமார் (49). இவர் அரிசி கடைவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு கேஸ் ஏஜென்சி 'எடுத்து நடத்த முடிவு செய்திருந்தார். இதையடுத்து ரஞ்சித்குமார் தனியார் நிறுவனத்திற்கு கேஸ் ஏஜென்சி கேட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பி இருந்தார். இதனையடுத்து மர்ம ஆசாமி ஒருவர் ரஞ்சித் குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டார்.

செல்போனில் பேசிய மர்ம ஆசாமி தன்னை ஹெச்பி எல் பிஜியில் இருந்து ஜோசி பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு கேஸ் டீலர்ஷிப் நீங்கள் எடுத்துக் கொண்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சித் குமார் பிறகு மும்பையில் உள்ள வங்கி கணக்கிற்கு பல்வேறு கட்டங்களில் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். பிறகு அவர் ஜோசியை தொடர்புகொள்ள முயன்ற போது தொடர்ப்பு கொள்ள முடியவில்லை.

பிறகு தான் ரஞ்சித் குமார் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித் குமார் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித்குமார்யிடம் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் மோசடி செய்த மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision