ஆர்.டி.இ இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது?

ஆர்.டி.இ இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது?

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ), ஆகஸ்ட் 4, 2009 அன்று இயற்றப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தின் ஒரு சட்டமாகும். இது 6 முதல் 14 வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-அ கீழ் இந்தியாவில் 14. ஏப்ரல் 1, 2010 அன்று கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) நடைமுறைக்கு வந்த போது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றிய 135 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) 6 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் ஒரு அடிப்படை உரிமையாக மாற்றுகிறது. அனைத்து தனியார் பள்ளிகளும் 25% இடங்களை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) அரசால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு பொருந்தாது. மேலும் நன்கொடை மற்றும்  குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு நேர்காணல் இல்லாமல் சேர்க்கை செய்ய வழிவகுக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) மூலம், தொடக்கக் கல்வி முடிவடையும் வரை எந்தவொரு குழந்தையையும் தடுத்து நிறுத்தவோ, வெளியேற்றவோ அல்லது வாரிய தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயமோ கிடையாது .

1. கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ) 2009 இன் முக்கிய நோக்கம் என்ன?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் பொருளாதார அல்லது சாதி பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான தொடக்கக் கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதே கல்வி உரிமைச்  சட்டத்தின் (ஆர்.டி.இ) முக்கிய நோக்கமாகும் 

2. கல்வி உரிமைக்கான முக்கியத்துவம் என்ன?

கல்வி வறுமையை குறைக்கிறது, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கிறது, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் ஒவ்வொரு நபரும் தங்கள் முழு திறனை அடைய உதவுகிறது. இது ஒரு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வருவாயைக் கொண்டுவருகிறது மற்றும் நீடித்த அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை அடைய சமூகங்களுக்கு உதவுகிறது. மேலும் அனைத்து  மனித உரிமைகளையும் அடைவதற்கு கல்வி ஒரு முக்கியமான ஆயுதமாகும்.

பூமி – கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ)

இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் அல்லது கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ) 2009 இன் படி கல்வி என்பது நாட்டில்  உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமையாக மாற்றியது, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியில் உள்ள குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதம் செய்கிறது. நாடு முழுவதும் கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் சேர்க்கை இடங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 15 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உரிமைச்சட்டம்(ஆர்.டி.இ) மூலமாக  1.2 லட்சம் இலவச இடங்கள் கிடைக்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் 50-60% இடங்கள் மட்டுமே நிரம்புகிறது.

இதற்கு முக்கியமான காரணம் மக்களிடையே கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ) பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையும், விண்ணப்பங்களை சமர்பிப்பதில் (Offline) மக்களுக்கு எளிமையான அணுகல் முறை இல்லாமையும் காரணமாகும். ஆர்டிஇ தமிழ்நாடு சேர்க்கை 2021-22 ஆன்லைன் விண்ணப்பத்தை rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு, வழிகாட்டுதல்கள், தமிழ்நாடு ஆர்டிஇ சேர்க்கைக்கான ஆன்லைன் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. 
ஆர்டிஇ சட்டம் 2009 இன் கீழ், பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கிடைக்கும். டி.என் பள்ளி கல்வித் துறை ஆர்.டி.இ ஆன்லைன் விண்ணப்ப படிவம் 2021-22  கிடைக்கும். ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் குழந்தைகளை சேர்ப்பதற்கு குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் அல்லது 2 லட்சமாக இருக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1.புகைப்படம் 
2.பிறப்பு சான்றிதழ் 
3.ஆதார் அட்டை
 4.குடும்ப அட்டை 
5.வருமான சான்றிதழ்
6. ஜாதி சான்றிதழ்
7. இருப்பிடச் சான்றிதழ்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தேர்வான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP