திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜாதி ரீதியாக பேச்சு - பரபரப்பு

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஜாதி ரீதியாக பேச்சு -  பரபரப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (30.08.2023) தொடங்கியது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், தனக்கு ஜாதி ரீதியாக இருக்கை பின்புறம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயரிடம் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பார்த்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் அம்பிகாபதி என்ன ஜாதி என்று கேள்வி எழுப்பினார். இதனால் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் கட்சி அடிப்படையில் அவர்களுக்கு இருக்கை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது என மேயர் அன்பழகன் தெரிவித்தார். 

ஏற்கனவே மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக கவுன்சிலர்களே மேயரை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்த நிலையில் தற்பொழுது திமுக கூட்டணி கட்சி இருக்கக்கூடிய கவுன்சிலர்களுக்கு ஜாதி ரீதியாக இருக்கை ஒதுக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் வழக்கமாக நடைபெறும் மாமன்ற கூட்டத்திற்கு செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் 10 நிமிடங்கள் அனுமதிக்கப்படுவர். ஆனால் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜாதி ரீதியான பிரச்சினை இருந்ததால் இக்கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க கூடாது என அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஒளிப்பதிவாளர்களை கூட்ட அரங்கில் இருந்து வெளியே செல்லுமாறு மேயர் கடிந்து கொண்டார்

இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மதிவாணன், ஆண்டாள் ராம்குமார், துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision