கடைகளில் அதிரடி சோதனை: புகையிலை பொருட்கள் பறிமுதல்- 37 பேர் கைது

கடைகளில் அதிரடி சோதனை: புகையிலை பொருட்கள் பறிமுதல்- 37 பேர் கைது

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்கள் நலனை காக்கவும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட, "போதை பொருள் இல்லாத தமிழ்நாடு "விழிப்புணர்வு பிரச்சாரம்" தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதின்பேரில், தமிழக காவல்துறை இயக்குநர் C.P.சங்கர் ஜிவால்,  அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,

திருச்சி மாநகரில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகள்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் துணையுடன் சிறப்பு சோதனை (Special Drive) திருச்சி மாநகர் முழுவதும் நடத்தப்பட்டது.

அதன்படி திருச்சி மாநகர் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் துணையுடன் காவல்துறையினர் இணைந்து பள்ளி கல்லூரி அருகில் உள்ள பெட்டிகடைகள், டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைகளில் குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதை பொருள்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு சோதனை (Special Drive) நடத்தப்பட்டது.

இச்சோதனையில் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB Road-ல் வாழைக்காய் மண்டி அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 23 AW 3003 என்ற பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்தபோது, காரில் சுமார் ரூ.72,600/- மதிப்புள்ள புகையிலை, RMD பான்மசாலா, விமல், கூல்லிப் போன்ற போதை பொருள்கள் மற்றும் ஒரு செல்போனை கைப்பற்றியும், (காருடன் சேர்ந்து மொத்த மதிப்பு ரூ.172600/-) காரின் உரிமையாளர் லால்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தும், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சோதனையில் சுமார் 70 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு அரசால் சுமார் ரூ.1,00,000/- ஆகும். மேற்கண்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட சிறப்பு சோதனையில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்க, காவல உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த அலுவலர்கள் மேற்கண்ட சோதனையில் ஈடுபட்டார்கள்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் : 96262-73399 மூலமும், காவல்துறை அவசர உதவி எண்.100க்கும் மற்றும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்.

திருச்சி மாநகரில் இதுபோன்று "போதை பொருள் தடுப்பு சிறப்பு சோதனைகள்”(Special Drive) தொடர்ந்து நடைபெறும் எனவும், புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது தொடர்ந்து சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி,  கடுமையாக எச்சரித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision