திருச்சியில் தொடங்கிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு!!

திருச்சியில் தொடங்கிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சமீபத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று திருச்சி மாநகரில் 11 இடங்களிலும், புறநகர்களில் 37 மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது.

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான தமிழகம் முழுவதும் தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் திருச்சியில் 20,880 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.

Advertisement

இதில் 17,056 ஆண்களும், 3229 பெண்களும் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணிகளில் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் தலைமையில், டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.