மணப்பாறை நகர்மன்றத்தில் திருப்புமுனை: அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் அமைச்சர்கள் முன்னிலையில் இணைந்தனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 11, அதிமுக 11 என்ற சமபலத்தில் வெற்றி பெற்ற நிலையில் சுயேட்சைகள் 5 பேரும் திமுகவிற்கு ஆதரவு அளித்து திமுக பலம் 16 ஆக உயர்ந்தது. இருப்பினும் நகர்மன்ற தலைவர் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.
அதனைத்தொடர்ந்து திமுகவினர் தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தலை புறக்கணித்து வந்த நிலையில், மணப்பாறை நகர்மன்ற பணிகள் ஸ்தம்பித்து நின்றது.
இந்த சூழ்நிலையில் இன்று அதிமுகவை சேர்ந்த 1- வது உறுப்பினர் செல்லம்மாள், 13-வது வார்டு உறுப்பினர் வாணி ஆகியோர் திமுக நகர செயலாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துள்ளனர்.
இது தற்போது மணப்பாறை நகர்மன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. நகர்மன்றத்தை 53 வருடத்திற்கு பிறகு கைப்பற்றியுள்ள அதிமுக அதை தக்க வைத்துக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO