திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியரான ஐந்தாம் வகுப்பு மாணவன்!
திருச்சி திருவரங்கத்தில் ஆட்டோ ஓட்டும் ஞானசேகரன் மனைவி சாந்தா இவர்களின் மகன் திலோசன்.திலோசன் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். மூன்றாம் வகுப்பு முதல் கராத்தே கற்றுக் தற்போது பிளாக்பெல்ட் பெற்றுள்ளார். தான் கற்றுக்கொண்ட கலையை தன் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கற்றுத் தர அனுமதி வேண்டியுள்ளார்.
மாணவனின் ஆர்வமூம் சேவைமிக்க எண்ணத்தையும் ஊக்குவிக்க விரைவில்நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கராத்தே பயிற்சி தொடங்கிட உள்ளனர்.மாணவனின் இந்த முயற்சியை பாராட்டி அம்மாணவனை, வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் ,பள்ளி ஆசிரியர்கள் பதக்கம் அணிவித்தனர்.
வறுமையிலும் தான் கற்றுக் கொண்ட கலையை தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் இந்த மாணவனின் எண்ணம் எல்லோரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறுகையில், அரசு பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகள் ஒரு சமூகத்திற்கான மாற்றத்தை உருவாக்கும் மாணவனின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO