900 கிராம் எடை புதிய வகை கஞ்சா எண்ணெய் திருச்சி சரக இருப்புப் பாதை போலீசார் பறிமுதல் - லட்ச ரூபாயில் விற்பனை பகீர் தகவல்

900 கிராம் எடை புதிய வகை கஞ்சா எண்ணெய் திருச்சி சரக இருப்புப் பாதை போலீசார் பறிமுதல் - லட்ச ரூபாயில் விற்பனை பகீர் தகவல்

ஹவுராவிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செலவதற்கு காலை 6:50 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலைய நடைமேடை எண்  4ல் வந்த ஹவுரா - புதுச்சேரி விரைவு ரயில் எண் 12867 திருச்சி சரக இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் மற்றும் திருச்சி இருப்பு பாதை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோரின் மேற்பார்வையில் தனிப்படையினர் பொது பெட்டியில்  சோதனை நடத்தினர். 

ஒடிசா மாநிலம் முகிர்வன், உமிழ்தார் அஞ்சலைச் சேர்ந்த  ஷீசிரியா குமார்கிரி என்ற நபர் வைத்திருந்த பையில் சுமார் 2 கிலோ 50 கிராம் கஞ்சாவும், 900 கிராம் எடை கொண்ட கஞ்சா எண்ணை பறிமுதல். 
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 லட்சம் இருக்கும் என தெரிய வருகிறது.

தற்போது தமிழகத்தில் கஞ்சா விற்பனை தடுக்கும் பொருட்டு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் போது போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தற்பொழுது நூதன முறையில் கஞ்சா விற்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தான் தற்பொழுது கஞ்சாவை எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படுகிறது இவற்றை இருப்புப் பாதை போலீசார் கண்டுபிடித்து தடுத்துள்ளனர். தற்பொழுது இந்த கஞ்சா எண்ணெய் லட்சுக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO