திருவெறும்பூர் பகுதியில் பழுதடைந்த சாலையை அப்பகுதி மக்கள் சொந்த செலவில்  சீரமைத்த சம்பவம்  

திருவெறும்பூர் பகுதியில் பழுதடைந்த சாலையை அப்பகுதி மக்கள் சொந்த செலவில்  சீரமைத்த சம்பவம்  

மக்கள்  சேவை செய்யும் பணியே  அரசாங்கத்தின் பணி ஆனால் மாநகராட்சி  அதைவிடுத்து  அலட்சியப் போக்கில் இருக்கின்றது. பொதுமக்களை தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ளும் மன நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையினை பொதுமக்களே  தங்களுக்குள்  நிதி திரட்டி சாலையை சீரமைக்கும் பணியை செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம்  பொன்மலை பகுதியை சேர்ந்த 63ஆம் வார்டில் திருவெறும்பூர் நியூடவுன்முத்துநகர்  SASநகரில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனால் அவ்வப்போது சாலையை குழி தோண்டுதல் நிலை ஏற்பட்டபோதும் அதனை சரியான முறையில் சீரமைக்காமல் விட்டு விட்டு அப்படியே சென்று விட்டனர்  .

பலமுறை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் அவ்வப்போது வந்து அதனை தற்காலிக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனரே   தவிர நிரந்தரமாக சாலை அமைப்பதாக  தெரியவில்லை. மேலும் மக்கள் வைத்த கோரிக்கையையும்   ஏற்றதாக தெரியவில்லை.

எனவே இதனால் தாங்கள்  தானே பாதிக்கப்படுகிறோம்  என்று அப்பகுதியில் உள்ள மக்களே தங்களுடைய முயற்சியால் தன்னார்வலர்களின் ஆர்வத்தினாலும் தாங்களே சாலையை  போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ரெசிடென்சியல் வெல்ஃபேர் அசோசியேஷன் RWA இணைந்து சாலையை சீரமைக்க அதற்காக மக்கள் தங்களுடைய நிதியிலிருந்து ரூபாய் 35000 அளவிற்கு புதிதாக சாலை அமைத்து உள்ளனர் .

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை இணையும் பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் அளவுக்கு பழுதடைந்த சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த நிலையில் பல நேரங்களில் பல விபத்துக்கள் நேரிட்டது .மாநகராட்சி மாவட்ட் நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்த பின்னும் அவர்களுடைய வாக்குறுதிகள் எதுவும் நம்பகத்தன்மையாக இல்லை. அப்பபகுதி மக்கள் தாங்களே சாலை சீரமைக்க  முடிவுக்கு வந்தனர். பின்புதான் இந்த சாலையை செம்மண் கொட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். 

இப்பகுதி மக்களும் தங்களால் இயன்ற வரை 500, 1000 என உதவி செய்து கிட்டத்தட்ட 35,000ரூபாய் இன்றைக்கு கிடைத்தது .இதை வைத்து சாலை பணிகளை மேற்கொண்டோம் .

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நிலை வரும் பொழுது உதவி செய்யும் காரங்களும் கிடைக்கத்தான் செய்கிறது என்று இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் மன நிறைவோடு கூறினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM